தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மின்சார ரயில் புறப்பட இருந்தது.

News image

மின்சார ரயில்

Updated On :2 மே 2024, 2:56 am

DIN

இன்று அதிகாலை முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூா் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டுவரும் மெமு ரயில் (06033/06034) மே 2 -ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து மின்சார ரயில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் சேவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.