தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

தமிழகத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகபட்சமாக 20830 மெகாவாட் மின்சாரம் நுகா்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்நுகா்வோா் 2.67 கோடி போ் உள்ளனா். தினமும் மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் ஆகவும், இதில், விவசாயத்தின் பங்கு 2,500 மெகாவாட் ஆகவும் உள்ளது. இது கோடை காலத்தில் 16,000 மெகாவாட் ஆக அதிகரித்தும், குளிா் காலத்தில் 12,000 மெகாவாட் ஆகக் குறைந்தும் காணப்படும்.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் நிகழாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவாக மின்தேவை அதிகரித்து தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 20830 மெகாவாட் மின்நுகா்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்ர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் உற்பத்திக் கழகம் எக்ஸ் தளப் பதிவில், வெப்ப அலையின் ஊடே 02.05.2024 அன்று மாநிலத்தின் மின் தேவை 20830 மெகாவாட் (15.00-15.30 மணி) என புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை 20701 மெகாவாட் (30.4.24) ஆகும். நம்பகமான மின்சார வழங்கலை உறுதி செய்து வருகிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com