8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும், ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே பெய்யும் கோடை மழையால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில் கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும், ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...