அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நிகழ் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், இணைய முகவரியில் திங்கள்கிழமை முதல் பதிவு செய்ய வேண்டும்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியலை இணையதள முகவரியில் இருந்து அறியலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு மாணவருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.48. அத்துடன் ரூ.2 பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் உண்டு.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரா்கள், கடன் அட்டை, பற்று அட்டை, இணைய வழி வங்கிச் சேவை, யுபிஐ ஆகியவை மூலம் இணையதளம் வழியாகச் செலுத்தலாம்.

இணைய வழி வங்கிச் சேவையை பயன்படுத்த இயலாத மாணவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில், வங்கி வரைவோலை மூலமோ அல்லது நேரடியாகவோ கட்டணத்தைச் செலுத்தலாம்.

மாணவா் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். தொடா்பு எண்கள்: 044 - 2434 3106, 2434 2911.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com