
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) வெளியாகிவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.