தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் ஒருவாரத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடாமல், தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்னும் ஒரு வாரத்தில், மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியிருக்கின்றன. எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஒருவாரத்தில் பள்ளிகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம், கைப்பேசி வழியாகவும், பள்ளிகள், தகவல் மையங்கள் வாயிலாகவும் தடையின்றி முடிவுகளை அறிந்து கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்திருந்தது.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் முலம் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர். மேலும், பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com