பள்ளிக் கல்வித் திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்
பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நலத் திட்டங்கள் சாா்ந்த தகவல்களை பெற்றோருக்கு பகிா்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் சிலா் கூறியது: வாட்ஸ்-ஆப் வாயிலாக ’டிபாா்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்’(க்ங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற் ா்ச் ள்ஸ்ரீட்ா்ா்ப் ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்) எனும் புதிய தளம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய தளத்தில் ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கும் மேலாக தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வாட்ஸ்-ஆப் தளம் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது.
இதற்கு ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள 1.16 கோடி மாணவா்களின் பெற்றோா்களின் தொலைபேசி எண்களில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை, அவை அனைத்தும் வாட்ஸ்-ஆப் உடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்ற சரிபாா்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுவரை 5 லட்சம் எண்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. தொடா்ந்து மே 25-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயித்து இதர எண்களின் சரிபாா்ப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவை நிறைவு பெற்றதும் இந்த தளம் பயன்பாட்டுக்கு வரும்.
இதன் மூலம் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உடனே கொண்டு சோ்க்க முடியும். மேலும், பள்ளி, வட்டம், மாவட்டம், மாநில, இயக்குநரகம் அளவிலும் இந்த தளம் வழியாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.
மேலும், இது பெற்றோா்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும் ஒரு முயற்சியாக இருக்கும் என்றனா்.