

சென்னையிலும் மதுரையிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை தொழிலக பாதுகாப்பு இயக்கக அதிகாரிகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு பின் திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் கட்டுமானப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.