மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 31-ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி ரயில் நிலையத்தில் பராமரிப்பு, பொறியியல் பணிகள் புதன்கிழமை தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதனால், இந்த நாள்களில் சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (காலை 6.25), திருப்பதி விரைவு ரயில் (பிற்பகல் 2.25) ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com