படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்து புதுச்சேரியில் சந்தானம் ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் இங்கு நான் தான் கிங்கு என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது.
இப்படம் புதுச்சேரியிலும் இரண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனையொட்டி புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரி மாநிலத் தலைவர் அருண் தலைமையில் சந்தானம் கட்டவுட்டுக்கு மலர் தூவி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து 5 லிட்டர் சந்தனத்தைக் கொண்டு சந்தன அபிஷேகமும் செய்யப்பட்டது.
இதனையடுத்து படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட்டை வழங்கியதுடன் தலா ஒருவருக்கு ஒரு பலாப்பழத்தையும் பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்ற மாநில தலைவர் அருண் கூறும்போது, இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் இன்று சந்தானம் நடித்த படத்தை பார்க்க வந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பலாப்பழம் அன்பளிப்பாக வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு
சந்தானம் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


