கோப்புப் படம்
கோப்புப் படம்

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

Published on

இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் 167 பயணிகளுடன் சென்ற விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து 167 பேருடன் பெங்களூரு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிகழ்வால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com