
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் விடியோவை வெளியிட்டு புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகுவதாக அறிவித்து, மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில், "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!" என்று ராகுல் காந்தி மக்களுடன் உரையாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு நன்மை செய்ய மோடி, ராகுல் காந்தி என யார் பிரதமாக வந்தாலும் வரவேற்போம் என்று முன்னதாக செல்லூர் ராஜு பேசியிருந்த நிலையில், இப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.