
தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1. ஜூன் 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்(06041) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. ஜூன் 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.15-க்கு புறப்பட்டு மங்களூரு சென்ட்ரல் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்(06042) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் பகல் 2.15-க்கு புறப்பட்டு நிஜாமுதீன் வரை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில்(06071) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
4. ஜூன் 10, 17, 24, ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிஜாமுதீனில் காலை 4.10-க்கு புறப்பட்டு கொச்சுவேலி வரை இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில்(06072) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
5. ஜூன் 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50-க்கு புறப்பட்டு வேளாங்கன்னி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06037) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
6. ஜூன் 22, 24, 29, ஜூலை 1 ஆகிய தேதிகளில் வேளாங்கன்னியில் இருந்து பகல் 2.45-க்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06038) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.