ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை: போக்குவரத்துத் துறை

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை: போக்குவரத்துத் துறை

News image
14/05/24: Perambalur, Tamil Nadu: A file pic of women travelling free in a Government bus:Express/M K Ashok Kumar- Center-Center-Chennai
Updated On :22 மே 2024, 7:36 am

DIN

தமிழகத்தில் பணியில் உள்ள காவலர்கள், டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு தமிழக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கை இந்த விவகாரத்துக்குப் பொருந்தும் எனவும் போக்குவரத்து துறை விளக்கம் கொடுத்துள்ளது.

நாகர்கோவில், செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அதுவும் போக்குவரத்து துறை சார்பில் கிளைம் செய்து கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் பொழுது பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் 2021 வெளியான தமிழக டிஜிபி உத்தரவு இந்த சம்பவத்துக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.