1 முதல் 12 வகுப்பு வரை - ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2024 - 25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அனைத்து பள்ளிகளை திறப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
ஷ்ரத்தா பாணியில்.. வங்கதேச எம்.பி. கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

அறிக்கையின்படி, ஜூன் 6ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கோடை வெயில் மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் என்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமோ என்று பெற்றோர் கவலை அடைந்துவந்த நிலையில், ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com