ஜோலார்பேட்டை அருகே விழுந்த மர்ம பொருள்: ஐந்து அடிக்கு பள்ளம்

ஜோலார்பேட்டை அருகே விழுந்த மர்ம பொருளால் ஐந்து அடிக்கு பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி
ஐந்து அடி பள்ளம்
ஐந்து அடி பள்ளம்
Published on
Updated on
1 min read

ஜோலார்பேட்டை அருகே வானில் இருந்து மர்ம பொருள் விழுந்து ஐந்து அடி அளவிலான பள்ளம் ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார் ஆட்சியர் தர்ப்பகராஜ்.

இந்தப் பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வையுங்கள் என கிராம நிர்வாக அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராவி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது.

ஐந்து அடி பள்ளம்
2024 மக்களவைத் தேர்தல் மிக நீண்டது என நினைத்திருந்தால் தவறு! முழு விவரம்!!

அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார் ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் திரும்பவும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதைக் கவனித்துள்ளார்.

இதன் காரணமாக அப்பகுதி மக்களிடம் கூறுகையில் அந்த பள்ளத்தின் முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று குவிந்தனர். மேலும் இந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் அச்சம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இந்த பள்ளத்தை முதலில் பார்த்தவர் யார்? யாருக்கு சொந்தமான இடம் எனவும் கேட்டறிந்தார்‌.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனிடம் இந்த பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொள்வார்கள். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் எனக் கூறிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com