பிரதமர் மோடியின் 28 வினாடி தியான விடியோ!

விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்யும் 28 வினாடி விடியோ வெளியானது.
தியானத்தில் பிரதமர்
தியானத்தில் பிரதமர்
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, குமரி மாவட்டத்தின் சிறப்பான இடங்களில் ஒன்றான விவேகானந்தர் பாறைக்கு வந்து 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துகொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து நேராகக் கிளம்பி கன்னியாகுமரி வந்துவிட்டார். கன்னியாகுமரியில், பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனிப் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.

அங்கு இரவு 7 மணியளவில் தனது 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார். இன்று காலை அவர் தியானம் செய்த புகைப்படங்களும் 28 வினாடிகள் ஓடும் விடியோவும் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தர் 1892ஆம் ஆண்டு கன்னியாகுமரிரயில் உள்ள இதே பாறையில் 3 நாள்கள் தியானம் செய்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடியும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியானத்தில் பிரதமர்
பிரதமர் மோடியின் முதல் தியான புகைப்படம் வெளியானது!

மோடியின் தியான விடியோ பற்றி பல்வேறு விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் வரத்தொடங்கிவிட்டது. அதில் சிலர், 28 வினாடி விடியோவில், 9 இடங்களிலிருந்து கேமராக்கள் படம்பிடித்துள்ளன. தியானத்தை மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு தியான விடியோவில், அவர் தியானம் செய்யும் இடம் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது. அவர் தியானம் செய்யும் ஆசனங்கள் மூன்று முறை மாறியிருக்கிறது.

அவர் அமர்ந்து தியானம் செய்யும் இடமே இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெறும் 28 வினாடி விடியோவுக்குள் நிகழ்ந்துள்ளது என்று பலவாறு விமரிசனங்கள் எழுந்துள்ளன.

தியானத்தில் பிரதமர்
அன்று இமயமலை, இன்று குமரி முனை! மோடியின் தியானம்!

கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வருகை தந்த பிரதமரை வரவேற்க பாஜக தலைவர்கள் யாரும் வரவில்லை. இந்த நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக் கூடாது என்று கட்சியினருக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியிருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேராக அவர் குமரி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com