தமிழ்நாடு
சேலம் - எழும்பூா் விரைவு ரயில் மேல்நாரியப்பனூரில் நின்றுசெல்லும்
சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் வரும் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை சின்ன சேலம் அருகேயுள்ளமேல்நாரியப்பனூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேல்நாரியப்பனூா் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை சேலத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 22154) மேல்நாரியப்பனூரில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.
அதேபோல், ஜூன் 13-ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து மாலை 4.35 மணிக்கு மங்களூரு செல்லும் விரைவு ரயிலும் (எண்: 16855), யஷ்வந்த்பூரிலிருந்து ஜூன் 15-இல் புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலும் (எண்: 16573) மேல்நாரியப்பனூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.