அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள் என்று கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் சீனிவாசன்.
Published on
Updated on
1 min read

அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள் என்று கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் ஜெயலலிதா கடந்த 2014இல் அளித்த ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த அக்.30 தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் சென்று கையெழுத்திட்டு கடந்த அக்.25ஆம் தேதி தங்க கவசத்தை பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் அதனை மதுரை அண்ணா நகர் வங்கியில் இன்று ஒப்படைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

சத் பூஜை: நவ 7-ல் தில்லியில் பொது விடுமுறை அறிவிப்பு

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்று முடிந்தாலும் கூட, அது குறித்து நோ கமெண்ட்ஸ் தான். இப்போதுதான் அறிமுகம் ஆகி உள்ளார் பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுகவைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள். ஆகையால் அவர்கள் குறித்து நடவடிக்கை என்பதற்கெல்லாம் இடமில்லை.

நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஆகையால் கூட்டத்திற்கு முன்பு யூகத்தின் அடிப்படையில் நாம் பேச முடியாது' என்றார்.

இந்த பேட்டியின் போது தேவரின் தங்கக் கவசம் பாதுகாப்பாக வைக்கப்படும் வங்கியின் பெயரை மறந்து அருகில் இருந்த செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமாரிடம் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டது நகைப்பை ஏற்படுத்தியது. காரணம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த வங்கியில் தங்க கவசத்தை பெற்று திரும்ப ஒப்படைக்கும் முக்கியமான பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com