ஞாயிறு அட்டவணைப்படி 
இன்று மின்சார ரயில்கள் இயக்கம்

ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.
Published on

சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியாா் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மின்சார ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை (நவ.2) சென்னை - அரக்கோணம், சூலூா்பேட்டை வழித்தடத்திலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திலும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com