பீரோவை உடைத்து திருடிய கொள்ளையர்கள்.
பீரோவை உடைத்து திருடிய கொள்ளையர்கள்.

கந்தர்வகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டு: தம்பதி மீதும் தாக்குதல்

கந்தர்வகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள், தம்பதி மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கந்தர்வகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள், தம்பதி மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி முல்லை நகரில் வசித்து வருபவர் அப்துல் முனாப் மகன் சையது அப்பாஸ் (45), இவரது மனைவி ரஹ்மத்நிஷா (30 ) மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டினை பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து வீட்டிலிருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த வியாபார பணம் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ரகமத்நிஷா கழுத்தில் கிடந்த ஆறுபவன் மதிப்புள்ள தங்கச் செயின்ஆகியவற்றை பறித்தனர்.

அப்போது அவர்களை தூங்கி எழுந்த சையது அப்பாஸ் தடுக்க முயன்ற போது மர்ம நபர்கள் சையது அப்பாஸின் தலையில் கட்டையால் பலமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். இவைகளை திருடிய மர்மநபர்கள் பின் வழியாக தப்பி ஓடி விட்டனர். பின்னர் ரஹ்மத் நிஷாவின் கூக்குரலை கேட்டு அருகில் இருந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயமடைந்த சையது அப்பாஸை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு! 2 மாணவிகள் மயக்கம்

தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், காவல் ஆய்வாளர் சுகுமார், காவல் சார்பு ஆய்வாளர் மார்நாடு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது மேலும் இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதே பகுதியில் இருக்கும் கருப்பைய்யன் என்பவர் வீட்டு பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.16,000 பணமும் 4 சவரைன் நகையும் திருடி உள்ளனர்.

தொடர்ந்து அருகில் இருந்த வீட்டிலேயும் திருட முயற்சித்துள்ளனர். இதன் பிறகு சையது அப்பாஸ் வீட்டில் இந்த திருட்டில் மர்ம ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com