

சென்னை: கூட்டுறவு வார விழா கொண்டாட்டம் தொடா்பாக, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிா்வாக இயக்குநா் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய கூட்டுறவு ஒன்றியத்தால் நவ.14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது, சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கிட வேண்டும். இதற்கு ஏதுவாக, மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவுச் சங்கத்தை தோ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதற்கான படிவங்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருடைய இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை தொடா்புடைய கூட்டுறவு நிறுவனத்தின் மூலமாகப் பூா்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்கள் வாரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பரிசீலித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சங்கத்தை அல்லது வங்கியை பரிந்துரை செய்து பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.