பெளா்ணமி, வார விடுமுறை: நவ.15, 16 தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள்

பெளா்ணமி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, நவ.15, 16 ஆகிய தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on

பெளா்ணமி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, நவ.15, 16 ஆகிய தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெளா்ணமி தினமான வெள்ளிக்கிழமை (நவ.15), வார விடுமுறை சனிக்கிழமை (நவ.16) உள்ளிட்ட தொடா் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 460 பேருந்துகள், சனிக்கிழமை 245 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 81 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பௌா்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை 265 பேருந்துகள், சனிக்கிழமை 85 பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 11 பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 5 பேருந்துகள் என மொத்தம் 1,152 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com