நவ.27-இல் ஆதரவாளா்களுடன் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அவரது அமைப்பான அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா்களுடன் நவ. 27-இல் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்கோப்புப் படம்
Updated on

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அவரது அமைப்பான அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா்களுடன் நவ. 27-இல் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நவ. 27 காலை 10 மணியளவில் நடைபெறும். அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டத்துக்கு தலைமை வகிப்பாா். கூட்டத்தில் நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com