எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

எல்ஐசி இந்தியா வலைதளத்தின் முகப்பு பக்கத்தின் மொழி மாற்றியதற்கு எதிர்ப்பு...
எல்ஐசி இந்தியா முகப்பு பக்கம்
எல்ஐசி இந்தியா முகப்பு பக்கம்LIC
Published on
Updated on
1 min read

எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஹிந்தியாக மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஆங்கிலமாக இருந்த நிலையில், திடீரென்று ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மொழி மாற்றத்துக்கான மெனுவும் ஹிந்தியில் இடம்பெற்றுள்ளதால், ஹிந்தி தெரியாத வாடிக்கையாளர்கள் வலைதளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எல்ஐசி இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் முதல்வர் தெரிவித்திருப்பதாவது:

“எல்ஐசி இணையதளம் ஹிந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட ஹிந்தியில் காட்டப்படுகிறது.

இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு செய்வதாகும். எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எல்ஐசி வாடிக்கையாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு தைரியம்?

இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com