
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடந்த 6 மணி நேரத்தில் 240 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், காலை 8.30 மணிக்குப் பிறகு 6 மணி நேரத்தில் பாம்பன் பகுதியில் மட்டும் 240 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் 220 மி.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது..
இந்த நிலையில், நாகை, ராமநாதபுரம், மாஞ்சோலை பகுதிகளில் நாளை வரை இதுபோன்ற பலத்த மழை தொடர்ந்து பெய்யும், அதன் பிறகு இப்பகுதிகளில் மழை சற்று ஓய்வெடுக்கும்.
பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து இந்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்ற பகுதிகளாக மாறும்.
ஒட்டுமொத்த தமிழகமும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இதுவரை 315 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த இலக்கு 443 மி.மீ. ஆனால், இந்த இலக்கு நவம்பர் மாத இறுதியிலேயே எட்டிவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.