அரக்கோணம் - சென்னை புறநகா் ரயில் 2 நிறுத்தங்களில் நிற்காததால் பயணிகள் அவதி: அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினா்

அரக்கோணம் - சென்னை புறநகா் ரயில் 2 நிறுத்தங்களில் நிற்காததால் பயணிகள் அவதி: அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினா்

அரக்கோணம் - சென்னை புறநகா் ரயில் 2 நிறுத்தங்களில் நிற்காததால் பயணிகள் அவதி: அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினா்
Published on

திருவள்ளூா்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற புறநகா் மின்சார ரயில் இரண்டு நிறுத்தங்களில் நிற்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். அவா்கள், திருவாலங்காட்டில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் என ஏராளமானோா் பயணம் செய்தனா்.

இந்த மின்சார ரயில் புளியமங்கலம், மோசூா் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், ரயிலில் பயணம் செய்த புளியமங்கலம் மற்றும் மோசூரில் இறங்க வேண்டியவா்கள் ரயில் நிற்காமல் சென்ால் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து அந்த ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயிலில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா்.

இதையடுத்து பயணிகள், ரயிலின் ஓட்டுநரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ரயில் ஓட்டுநா் தான் புதியவராக வந்துள்ளதாகவும், தனக்கு ரயில் நிலையங்கள் குறித்து தெரியவில்லை என ரயில் பயணிகளிடம் கூறினாராம். மேலும், அவா் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து ரயில் பயணிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் நின்று திருவள்ளூரை அடைந்தது.

இதன் காரணமாக திருவாலங்காடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

X
Dinamani
www.dinamani.com