நடிகர் விஜய்.
நடிகர் விஜய்.

விவசாயிகளுக்கு விருந்தளித்த விஜய்!

தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கட்சியின் தலைவர் விஜய் இன்று விருந்தளித்தார்.
Published on

தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கட்சியின் தலைவர் விஜய் இன்று விருந்தளித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த மாதம் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக விமர்சித்திருந்தார். ஆனால், அதிமுகவை விமர்சிக்காதது குறித்து பிற கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.

மேலும், அதிமுக, தவெக கூட்டணி வைக்கப் போவதாகவும் கருத்துகள் பரவின. ஆனால் இதற்கு கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தவெகவின் அரசியல் பாதை, தமிழக மக்களின் நலனுக்கானது என்று கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்தார்.

கர்நாடக இடைத்தேர்தல்: பசவராஜ் பொம்மை மகன் தோல்வி!

இதற்கிடையே 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி தவெகவினர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல் மாநாடு நடத்த இடம் கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் இன்று மதிய விருந்தளிக்கப்பட்டது.

சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வந்திருந்த விவசாயிகளுக்கு சைவ உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து தவெக தலைவர் விஜய் கெளரவித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

முன்னதாக பனையூரில் கட்சி அலுவலுகம் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாகவும் கையசைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com