
சென்னை: திங்கள்கிழமை இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கும் நிலையில், மழை தொடர்பாக தொடர்ந்து கணித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் இன்று ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், திங்கள்கிழமை அதாவது 25ஆம் தேதி இரவு முதல் டெல்டா பகுதிகளில் மழை தொடங்கும், 26 மற்றும் 27ஆம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை 26 மற்றும் 27ஆம் தேதிகளில் அதிக கவனத்துடன் அணுக வேண்டும், இங்கு அதி கனமழைக்கு வாயப்பு உள்ளது. 26ஆம் தேதி மிக அதி கனமழை பெய்யலாம். டெல்டா மாவட்டங்களுக்கு 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விரைவில் விடுக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு சொல்வது என்னவென்றால், தேவை பொறுமை. விரைவில் உங்களுக்கான தகவல் வரும். இன்று நவம்பர் 25தான். அதிக காலம் ஆகிவிடவில்லை.
ஒரு சில கணிப்புகள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறினால் தமிழகம் அருகே கரையைக் கடக்கும் என்றும், அதே நேரத்தில் வானிலை ஆய்வு மைய கணிப்புகள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிக காற்றின் வேகத்தால் இலங்கையிலிருந்து பர்மா நோக்கி புயல் சின்னத்தை கொண்டு சென்றுவிடும் வாய்ப்பும் உள்ளது.
ஒரு வேளை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தால், நமக்கு மழை கிடைக்காது, பலவீனமடைந்தார் வேர லெவலில் மழை கிடைக்கும். எனவே காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.