
ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.
புயல் கரையைக் கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். விழுப்பும், கடலூர், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும்.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களிலும் தரைக்காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். காவிரி படுகை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.