அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

News image

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.

Updated On :30 நவம்பர் 2024, 1:04 pm

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர்.10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபென்ஜால் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30-11-2024 முதல் 09-12-2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10-12-2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் ஃபென்ஜால் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.