ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் திரையரங்குகள், நகைக்கடைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலை.யில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளும் இன்று (நவ.30) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதாலும், நகைக்கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com