வாரவிடுமுறை நாள்கள் 860 சிறப்பு பேருந்துகள்
வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 860 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சனி(அக்.5) , ஞாயிற்றுக்கிழமை(அக்.6) வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை(அக்.4) 260 பேருந்துகளும், சனிக்கிழமை(அக்.5) 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மேலும், மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 15 பேருந்துகள், சனிக்கிழமை 15 பேருந்துகள் என ஆக மொத்தம் 860 பேருந்துகள் இயக்கப்படும்.
இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து
இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடைசி நேர நெரிசலை தவிா்க்க, முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.