வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

தான் குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
நடிகர் ரஜினிகாந்த்- கோப்புப்படம்.
Updated On :4 அக்டோபர் 2024, 11:09 am

DIN

தான் குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையைச் சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கும் ரஜினிகாந்த் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பில் இருக்கும்போதே, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக்கொண்டுள்ளார் ரஜினி.

பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.