அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்துக்குள்ளான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தற்போது வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் சனிக்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருப்பூண்டி காரைநகர் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் ஒன்று திடீரென காரின் குறுக்கில் வந்திருக்கிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சிறியளவில் சேதமடைந்தது. அதேசமயம் முன்னாள் அமைச்சர், ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆகியோர் சிறு காயங்களோடு உயிர் தப்பினர். இதையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.