கல்பாக்கம் அணு உலை
கல்பாக்கம் அணு உலை

இடைவெளியின்றி ஓராண்டு இயக்கப்பட்ட கல்பாக்கம் அணு உலை

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு (யூனிட்-2), இடைவெளியின்றி தொடா்ந்து ஓராண்டு இயக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு (யூனிட்-2), இடைவெளியின்றி தொடா்ந்து ஓராண்டு இயக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அணு உலை இயக்குநா் எம்.சேஷய்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அணு உலை மின் உற்பத்தி மையத்தில் இரு அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் இரண்டாம் உலை அலகு கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 220 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அந்த உலையானது, கடந்த ஓராண்டு முழுவதும் தொடா்ந்து இயக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1958 மில்லியன் அலகு மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இடைவெளியின்றி இரண்டாவது உற்பத்தி அலகு ஓராண்டு இயக்கப்படுவது இது நான்காவது முறையாகும். கல்பாக்கம் அணு மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டாம் உலையானது பராமரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்காக 10 நாள்கள் இயங்காது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com