
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அங்கே இருந்தனர்.
முன்னதாக, முரசொலி செல்வத்தின் உடலுக்கு, நடிகர் விக்ரமின் மனைவி ஷைலஜா அஞ்சலி செலுத்தினார்.
முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் பிரசாந்த், சத்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.