
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லும் நவஜீவன் விரைவு ரயில் 6 மணி நேரம் தாமதமாகப் புறப்படுகிறது.
காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 6 மணி நேரம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்பட்டு, விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும்.
இந்நிலையில் கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிக்க.. கவரப்பேட்டை ரயில் விபத்து: பழிசுமத்தும் விளையாட்டு ஆரம்பம்!
இந்நிலையில் தற்போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்று மாலை 4 மணி அளவில் அதாவது 6 மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் காலை ஆறு மணி முதல், விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லக்கூடிய மக்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.