மழைக்கு சவால்! வேளச்சேரி பாலத்தில் காரை நிறுத்தத் தொடங்கிய மக்கள்!

வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தத் தொடங்கிய மக்கள்.
Velachery
வேளச்சேரி மேம்பாலம்
Published on
Updated on
1 min read

மழைக்கு சவால் விடும் விதமாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை இன்றே சென்னைவாசிகள் நிறுத்தத் தொடங்கியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 200 மி.மீ. அளவு மழையும், நான்கு நாள்களில் 400 மி.மீ. வரை மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மழை பெய்தால் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி சுற்றுப் பகுதி உள்ளது.

இந்த பகுதியில் சாதாரண மழை பெய்தாலே வெள்ள நீர் சூழும் நிலை உள்ளதால், பெரு மழை காலங்களில் தங்களின் கார்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாவதை தவிர்க்க வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்துவதை சென்னைவாசிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மழை தொடங்குவதற்கு முன்னதாகவே பாலத்தில் கார்களுக்கு இடத்தை பிடித்து வருகின்றனர் வேளச்சேரி மக்கள்.

இன்று காலை முதல் போட்டி போட்டிக் கொண்டு தங்களின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.