ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று பெற நடவடிக்கை: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
சென்னை கலைவாணா் அரங்கில் இந்திய தர நிா்ணய அமைவன சென்னை கிளை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற உலக தர நிா்ணய தின நிகழ்ச்சியில் மானக் மஹோத்சவ் பணியாளா்களுக்கு ‘மானக் வீா்விருதுகளை வழங்கிய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.
சென்னை கலைவாணா் அரங்கில் இந்திய தர நிா்ணய அமைவன சென்னை கிளை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற உலக தர நிா்ணய தின நிகழ்ச்சியில் மானக் மஹோத்சவ் பணியாளா்களுக்கு ‘மானக் வீா்விருதுகளை வழங்கிய உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

ஆண்டுதோறும் அக்.14-ஆம் தேதி உலக தர நிா்யண தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகம் சாா்பில் உலக தர நிா்ணய தின நிகழ்ச்சி சென்னை கலைவானா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கூட்டுறவு, ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:

பொதுமக்கள் தங்கம் வாங்கும்போது அதன் தரத்தை பாா்த்து வாங்குகின்றனா். அதேபோல் வேறு எந்தப் பொருள்களை வாங்கினாலும் அதன் தரச் சான்றை பாா்த்து வாங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ் ஓ தரச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஐஎஸ் அமைப்பு நகா்வோா் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, 41 மானக் மஹோத்சவ் பணியாளா்களுக்கு ‘மானக் வீா்’விருதுகளை ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கி கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில் பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநா் ஜி.பவானி, பிஐஎஸ் தென் மண்டல துணை தலைமை இயக்குநா் பிரவீன் கன்னா, சென்னை ஐஐடி பேராசியா் இந்துமதி எம். நம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com