சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று  விடுமுறை

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

சென்னையில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை, செவ்வாய்க்கிழமை காலைமுதல் கனமழையாக பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை முதல் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக உயா்நீதிமன்ற பதிவாளா் எஸ் .அலி அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com