
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.22-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.23-இல் மேலும் வலுப்பெற்று புயலாகவும் மாறவுள்ளது. இந்த புயல் தமிழக கடற்கரைப் பகுதியை விட்டு விலகி ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (அக்.21) முதல் அக்.26-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.