நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்டன.
ஆசிரியர் தாக்கும் காட்சி
ஆசிரியர் தாக்கும் காட்சி
Published on
Updated on
1 min read

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து கடந்த வாரம் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், பயிற்சி மையம் பதிவு பெறாமல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் மாணவ, மாணவிகள் விடுதி மூடப்பட்டு, அதில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிட விசாரணை நடத்தியிருந்தார்.

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் பிரம்புகளைக் கொண்டு கடுமையாக தாக்குவது, காலணியை எடுத்து மாணவிகள் மீது வீசுவது போன்ற விடியோ காட்சி வெளியாகியிருந்தது.

இதையடுத்து இந்த மையத்துக்குச் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்திய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இந்த மையத்தில் 80 மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில் ஏராளமான மாணவா்களை தாக்கியுள்ளனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், 2 சிறாா்களையும் தாக்கியுள்ளனா். இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

இதுகுறித்து விசாரித்து ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்த பின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com