
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்.31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக அரசின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியம் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.