அமுதம் அங்காடியில் ரூ. 499-க்கு ஒரு மாத மளிகை பொருள் விற்பனை

அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ. 499-க்கு ஒரு மாதத்துக்கு தேவையான 15 மளிகை பொருள்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ மளிகைத் தொகுப்பு விற்பனை
தீபாவளியையொட்டி ரூ.499 விலையில் 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புத் திட்டத்தை சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன் மேயா் ஆா்.பிரியா, நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா்
தீபாவளியையொட்டி ரூ.499 விலையில் 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புத் திட்டத்தை சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன் மேயா் ஆா்.பிரியா, நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா்
Updated on
1 min read

சென்னை: அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ. 499-க்கு ஒரு மாதத்துக்கு தேவையான 15 மளிகை பொருள்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை கோபாலபுரத்தில் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுமக்களுக்கு லாபநோக்கமின்றி தரமான பொருள்கள் நியாயமான விலையில் வழங்கும் நோக்கில் அமுதம் அங்காடி தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் நவீனமயமாக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் 15 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு ‘அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு’ என்ற பெயரில் ரூ.499-க்கு வழங்கப்படுகிறது.

இதன் உண்மையான விலை ரூ. 650-ஆக இருக்கும். மக்களின் நலன் கருதி, விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மளிகைத்தொகுப்பு முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகா், பெரியாா் நகா் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையாறு, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞா் கருணாநிதி நகா், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அங்காடிகளில் தினமும் ரூ.5 லட்சம் அளவில் விற்பனை நடைபெறுகிறது. தனியாா் கடைகளில் பொருள்கள் வாங்குவதை விட அமுதம் அங்காடியில் வாங்கும் போது, மாதம் ரூ.1,500 வரை சேமிக்க முடியும்.

தமிழகம் முழுவதும் 100 அமுதம் அங்காடி அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் நெல் சேமிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சாா்பில் அக்.1-ஆம் தேதி முதல் 17 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பாமாயில், பருப்பு, சா்க்கரை, கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருள்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் தங்குதடையின்றி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களை காக்க வைக்கக் கூடாது என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில், உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன இயக்குநா் சு.பழனிசாமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஆ.அண்ணாநது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு

மஞ்சள்தூள் - 50 கி

கடுகு 124 கி

சீரகம் - 100 கி

வெந்தயம் - 100 கி

சோம்பு - 50 கி

மிளகு - 50 கி

மிளகாய் - 250 கி

தனியா - 500 கி

புளி - 500 கி

உப்பு - 1கிலோ

உளுந்தம் பருப்பு - 500 கி

கடலை பருப்பு - 200 கி

பாசிப்பருப்பு - 200 கி

வறுகடலை - 200 கி

பெருங்காயத்தூள் - 15 கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com