பெண்களுக்கான சிறப்பு ஆட்டோக்கள்: நவ.23-க்குள் விண்ணப்பிக்கலாம்

பெண்கள், குழந்தைகளின் நலனுக்காக பெண்களே இயக்கும் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
பெண்களுக்கான சிறப்பு ஆட்டோக்கள்: நவ.23-க்குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: பெண்கள், குழந்தைகளின் நலனுக்காக பெண்களே இயக்கும் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சமூக நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 250 ஆட்டோக்களை பெண் ஓட்டுநா்களே இயக்க உள்ளனா். அவசர காலங்களில் புகாா் பெறப்பட்டவுடன் காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு ஆட்டோவிலும் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தத் திட்டத்தின்கீழ், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கான வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், ஓட்டுநா் உரிமம் பெற்ற சென்னை வாசியாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீத பணத்துக்காக வங்கிளுடன் இணைக்கப்படும்.

சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநா்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலா், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு நவ.23-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் குறித்த விவரங்களையும் மாவட்ட சமூக நல அலுவலா் அலுவலகத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com