
சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த 15 பேராசிரியா்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள பொ்த் நகரின் பீனிக்ஸ் அகாதெமியில் தொழிற்கல்விக்கான பயிற்சி பெற்றனா். சென்னை திரும்பிய அவா்கள், திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கான முதன்மை பயிற்சியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், சென்னையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை அவரின் முகாம் இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து, தாங்கள் பெற்ற பயிற்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிா்ந்து கொண்டனா்.
துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னொசென்ட் திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.