பிக் பாஸ் 8: உருவ கேலி செய்து சிக்கிய செளந்தர்யா! ரசிகர்கள் எதிர்ப்பு!

பிக் பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குனிலைக் குறிப்பிட்டு பேசும் செளந்தர்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குனிலைக் குறிப்பிட்டு பேசும் செளந்தர்யாபடம் |எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் தொடரில் நடிகை ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஒவ்வொரு சீசனிலும் உருவ கேலி என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இம்முறை செளந்தர்யா உருவகேலி செய்துள்ளார்.

பிக் பாஸ் 8வது சீசனின் 17வது நாளான இன்று (அக். 23) ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாகவும், பெண்கள் அனைவரும் வாடிக்கையாளர்களாகவும் நடிக்க வேண்டும்.

நேற்று ஹோட்டல் ஊழியர்களாக பெண்கள் இருந்தனர். ஆண்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பெண்கள் வாடிக்கையாளர்களாக போட்டியில் பங்கேற்றனர்.

இதில் சப்பாத்தி சாப்பிட்ட செளந்தர்யா, அது உப்பாக இருந்ததால் ஹோட்டல் ஊழியரை அழைத்து கண்டித்துள்ளார். நான் சாப்பிடுவதே ஒரே ஒரு சப்பாதி. அதுவும் உப்பாக இருந்தால், என் முகம் அவங்க முகம் மாதிரி ஆகிவிடும் என ஜாக்குலினை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் கோபமடைந்த ஜாக்குலின், இனிமேல் காமெடிக்குக் கூட அப்படி சொல்லாதே, எனக்கு பிடிக்கவில்லை என செளந்தர்யாவிடம் கோபித்துக்கொண்டார்.

கொஞ்சம் கவனமாக (அட்டன்டிவா) இரு செளந்தர்யா என ஜாக்குலின் அறிவுறுத்தினார். செளந்தர்யா மந்தமாக இருப்பதாக ரசிகர்களும் கூறிவரும் நிலையில், ஜாக்குலின் சொன்னதற்கு செளந்தர்யா கோபமுற்று கத்தினார்.

ஒரே வார்த்தையை அடிக்கடி கூறி அழுத்தமாக பதிவு செய்யாதே என செளந்தர்யா ஜாக்குலினை எச்சரித்தார்.

எனினும் உருவ கேலி என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களே செளந்தர்யாவுக்கு எதிராக மாறியுள்ளனர். இதற்கு முன்பு ஜாக்குலினை மலமாடு எனக் கூறியதற்காகவும் செளந்தர்யா கண்டிக்கப்பட்டார். தற்போது மீண்டும் உருவ கேலி செய்துள்ளதால் ரசிகர்கள் பலர் செளந்தர்யாவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வார 'நாமினேஷன்' பட்டியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com