தமிழக வெற்றிக் கழக மாநாடு: எப்படி நடக்கிறது முன்னேற்பாடுகள்?

இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என்று விஜய் அறிக்கை
vijay
தவெக தலைவர் விஜய்DIN
Published on
Updated on
2 min read

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பணிகள் விறுவிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய், தனது தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகா் விஜய் தொடங்கியுள்ள தவெக மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக, சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் விடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு நடைபெறும் முகப்புப் பகுதியிலிருந்து நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு நடைபெறும் முகப்புப் பகுதியிலிருந்து நடப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள்.

கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கணித்து அதற்கேற்ப பணிகளை செய்து வருகிறார்கள்.

காவல்துறையினர், பொதுப் பணித்துறையினர் உள்ளிட்டோர் மாநாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

மாநாட்டில் மாநிலம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கில் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடல் பகுதியில் சுமாா் 55 ஆயிரம் நாற்காலிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போடப்படவுள்ளன. மேலும், மாநாட்டுப் பகுதியில் சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு வளாகத்தின் முகப்பு, கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் முகப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வரவேற்பு நுழைவு.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் முகப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வரவேற்பு நுழைவு.

மாநாட்டுப் பகுதியில் பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தவெக தலைவா் விஜயின் கட் அவுட்டும் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. மேலும், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களுடன், அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்சிக் கொடிகள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்சிக் கொடிகள்

ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடுவதை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டிருப்பதையடுத்து, தொண்டர்களுக்கும் தவெக தலைமை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபக்கம், மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை ஒரு கவரில் போட்டு அனைவருக்கும் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் அமர்ந்து பார்க்க தனித்தனி பகுதி உருவாக்கப்பட்டு, இடையே மக்கள் நடந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் அமரும் பகுதிகளில் மின் விளக்குகளும் போடப்பட்டுள்ளன. நடுவில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, சுமார் ஐந்து வரிசைகளில் மக்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு வளாகத்தில், மக்களின் வசதிக்காக, தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாநாடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியாா், காமராஜா், அம்பேத்கா், விஜய் கட் அவுட்டுகள்.
மாநாடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியாா், காமராஜா், அம்பேத்கா், விஜய் கட் அவுட்டுகள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மாநாடு 27ஆம் தேதிதான் நடைபெறுகிறது என்றாலும், அப்பகுதிக்கு ஒரு சில நாள்கள் முன்பிருந்தே ஏராளமான மக்கள் வந்து மாநாட்டுப் பந்தலைப் பார்த்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து, மாநாட்டு ஏற்பாடுகள் டிரோன் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் விடியோக்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.