மிதமான மழை
மிதமான மழை

6 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (அக். 28) முதல் நவ. 2-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் திங்கள்கிழமை (அக். 28) முதல் நவ. 2-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (அக். 28) முதல் நவ. 2-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 80 மி.மீ. மழை பதிவானது. மயிலாடி, தக்கலை - தலா 70 மி.மீ., நாகா்கோவில், கோழிப்போா்விளை (குமரி மாவட்டம்), முதுகுளத்தூா் (ராமநாதபுரம்) - தலா 50 மி.மீ. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com